ஓ ப்ரியசகி
என் ப்ரியசகி
என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும்
நீ தானடி
என் ஜென்மம் முழுவதும் நீயடி
என் ஜீவனடியே நீயடி
வாழ்வின் எல்லை வரை
ஓ ப்ரியசகி
என் ப்ரியசகி
என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும்
நீதானடி
மேகமாய் வந்து பூவிதைகளை மோகம் கொண்டு தூவ
பூவிதழ் வழி தேன் துளி பட்டு தேகம் சூடாக
பூ மகள் சூடாகினாள் அந்த தேன் துளி என்ன ஆகும்
ஆசையாய் நீ தீண்டினால் அது மீண்டும் பூவாகும்
தென்றல் வந்து தீண்டும் போது
தேவலோகம் தெரிகிறது
எந்தன் மார்பில் சாயும் போது இன்ப லோகம் தெரிகிறது
வா வா என்
தேவதையே
தேவதையே
ஓ ப்ரியசகி
உன் ப்ரியசகி
உன் உயிரிலே
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே
தேவதை இதழ் ஓரமே மது ஊருதே சுவையாக
வேண்டுமே சரி பாதியை சுகம் யாவும் எனக்காக
தேடுதே சுகம் தேடுதே இதழ் பாயுதே சுவைக்காக
தேவைகள் உன் தேவைகள் நான் தருவேன் முழுதாக
பார்வை பட்ட நொடியில்
எந்தன் உயிரும் பற்றி எரிகிறதே
பாவை உந்தன் கைகள் பட்டு
உலகம் பற்றி எரிகிறதே
எரிகிறதை
அணைத்து விடு
என்னை அணைத்து விடு
ஓ ப்ரியசகி
என் ப்ரியசகி
என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும்
நீ தானடி
இது உதடுகள் நடத்தும் யுத்தமா
இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா
வாழ்வின் எல்லை வரை
Comments (0)